ருசிக்க தயாரா? சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா நடத்தப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.

சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

உணவு வீணாவதைத் தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றை குறித்து விளக்கும் வகையில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளது.

இந்த உணவுத் திருவிழாவில் திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: ஏர் இந்தியா விமானிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!

ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 7 மணி அளவில்  உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/aug/02/ready-to-taste-food-festival-in-chennai-island-3891352.html