சென்னையில் வேகமாக பரவும் ’மெட்ராஸ் ஐ’ – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கால நிலை மாற்றத்தின்‌ காரணமாக ‘மெட்ராஸ்‌ – ஐ’ எனப்படும்‌ கண்‌ தொற்று நோய்‌ பாதிப்பு தற்‌போது பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும்‌, முதியவர்களுக்கும்‌ அதிக அளவில்‌ அப்பிரச்னை ஏற்படுவதாக கண்‌ மருத்துவர்கள்‌ தெரிவித்துள்ளனர்‌.

சென்னையில்‌ உள்ள கண்‌ மருத்துவமனைகளில்‌ நாள்தோறும்‌ ஐம்பதுக்கும்‌ மேற்பட்டோர்‌ ‘மெட்ராஸ்‌ – ஐ’ பாதிப்புக்காக சிகிச்சை பெற வருவதாகவும்‌ அவர்கள்‌ கூறுகின்றனர்‌.

விழியையும்‌, இமையையும்‌ இணைக்கும்‌ ஐவ்வு படலத்தில்‌ ஏற்படும்‌ வைரஸ்‌ தொற்றுதான்‌ ‘மெட்ராஸ்‌ – ஐ’ எனக்‌ கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள்‌ காற்று மூலமாகவும்‌, மாசு வாயிலாகவும்‌ பரவக்கூடும்‌. அதுமட்டுமன்றி, மெட்ராஸ்‌ – ஐ’ பிரச்னையால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ பயன்படுத்திய பொருள்களை உபயோகித்‌
தாலும்‌ மற்றவர்களுக்கு நோய்த்‌ தொற்று பரவும்‌ என மருத்துவர்‌கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

இந்த நிலையில்‌, ‘மெட்ராஸ்‌ – ஐ’ தொற்று அண்மைக்காலமாக கணிசமாக பரவி வருவதாக தகவல்கள்‌ தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டாக்டர்‌ அகர்வால்ஸ்‌ கண்‌ மருத்துவமனையின்‌ முதுநிலை மருத்துவர்‌ செளந்தரி கூறியதாவது,’மெட்ராஸ்‌ – ஐ’ எளிதில்‌ குணப்படுத்தக்கூடிய மிகச்‌ சாதாரணமான நோய்த்‌ தொற்றுதான்‌. ஆனால்‌, அதனை முதலிலேயே கண்‌டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்‌. காலந்தாழ்த்தி அலட்சியம்‌ செய்தால்‌ பார்வையில்‌ தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்‌.

கண்‌ எரிச்சல்‌, விழிப்‌பகுதி சிவந்து காணப்படுதல்‌, நீர்‌ சுரந்து கொண்டே இருத்தல்‌, இமைப்பகுதி ஒட்டிக்‌ கொள்ளுதல்‌ உள்‌ளிட்டவை மெட்ராஸ்‌ – ஐ-யின்‌ முக்கிய அறிகுறிகளாகும்‌.

பொதுவாக ஒரு கண்ணில்‌ ‘மெட்ராஸ்‌ – ஐ’ பிரச்னை ஏற்பட்‌டால்‌, மற்றொரு கண்ணிலும்‌ அந்த பாதிப்பு வருவதற்கு அதிகவாய்ப்புள்ளது.

எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள்‌, மிகவும்‌ கவனத்துடன்‌ இருக்க வேண்டும்‌. கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 2 பேருக்காவது ‘மெட்ராஸ்‌ – ஐ’ பாதிப்பு இருப்பதை நான்‌ உறுதி செய்கிறேன்‌ என்றார்‌‌.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/lifestyle/health-madras-eye-spreading-fast-in-chennai-779003.html