சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு மாநகராட்சி சீல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை : சென்னை பாரிமுனை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 256 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்தது. வடக்கு கோட்டை சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 256 கடைகள் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=788567