காணாமல் போன பெண் சடலமாக மீட்பு… கள்ளக்காதல் விவகாரம்? சென்னை அதிர்ச்சி – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு. ஜெய்சங்கர் என்பவருடன், எல்லையம்மன் கோயில் அருகே வந்து இறங்கினார். அதை பார்த்த மணிமாறன், மைதிலியிடம் சண்டை போட்டார். எங்கே இருவரும் ஊர்சுற்றி விட்டு வருகிறீர்கள் என கேட்டார். மேலும், ஜெய்சங்கரின் வண்டி சாவி பிடுங்கிகக்கொண்டார்.

பின்னர். மைதிலியை அங்கிருந்து அழைத்து சென்றார். இதையடுத்து தன் மனைவியை காணவில்லை என திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், மைதிலியை தேடிவந்தனர். ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தியதில், மணிமாறன் தான் மைதிலியை அழைத்து சென்றது தெரியவந்தது.
இந்தநிலையில், மணலி புதிய மேம்பாலத்தின் மைதிலி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த மைதிலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மணிமாறனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

22 வயசுக்கு 40 வயசுடன் நெருக்கம்… ஹோட்டல் சந்திப்பு… மனைவி ஷாக்… 500 சவரன் அபேஸ்

மனைவி வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரமடைந்த மணிமாறன் மனைவியை கொலை செய்துவிட்டு எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெய்சங்கருக்கும் மைதிலுக்கும் என்ன தொடர்பு என்பதை குறித்தும் விசாரிக்கின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/missing-woman-found-as-dead-body-police-suspects-her-husband-in-chennai/articleshow/93433095.cms