சென்னை 2வது விமான நிலையம் பரந்தூர்-ல் அமைக்க என்ன காரணம்? தங்கம் தென்னரசு விளக்கம்..!! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையவும், ஆசியாவிலேயே முதலீடுகளுக்குச் சிறந்த இடமாகச் சென்னையை மாற்றவும் சென்னைக்கு 2வது புதிய விமான நிலையம் தேவை என்பதைத் தாண்டி சென்னை-யின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாகவும் உள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் அதிகப்படியாக ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பயணிகள் வந்துள்ளனர் ஆனால் இது கொரோனாவுக்கு முன்பாக, கொரோனாவுக்குப் பின்பு அதிகப்படியாக ஜூன் 2022ல் 14.61 லட்சம் பயணிகள் வந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் முக்கிய முதலீட்டுத் தளமாக விளங்கும் சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூர்-ல் அமைக்க என்ன காரணம்..?

கர்நாடக, மகாராஷ்டிரா-வுக்கு போட்டியாகத் தமிழ்நாடு.. சென்னை-யில் சிப் தொழிற்சாலை..!

சென்னை

சென்னை

சென்னையில் விமானப் போக்குவரத்தும், விமானப் பணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்தது.

2வது விமான நிலையம்

2வது விமான நிலையம்

2வது விமான நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து நீண்ட காலமாக ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னூர், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையம்

இந்திய விமான நிலைய ஆணையம்

இதில் பல்வேறு ஆலோசனை, காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சாதகமான இடங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகியவை அறிவித்திருந்தது.

பன்னூர்

பன்னூர்

பன்னூரில் அதிகமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பல தடைகள் உள்ளதால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாக ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

பரந்தூர்

பரந்தூர்

மேலும், பன்னூர்-ஐ ஒப்பிடுகையில் பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் செலவும் குறைவு. இதைத் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்ட பல்வேறு அளவுக்கான மதிப்பெண்களின் படி தமிழ்நாடு அரசு பரந்தூரில் 2வது விமான நிலையத்தை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு வசதிகள்

உள்கட்டமைப்பு வசதிகள்

இந்த விமான நிலையம் செயல்படச் சிறிது காலம் எடுக்கும். அதற்கு முன், விமானப் பயணிகளின் பயணத்தை எளிதாக்க, தேவையான உள்கட்டமைப்புகள் வசதிகள் செயல்படுத்தவும், பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் தமிழக அரசு உறுதி செய்யும் எனவும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையில் பரந்தூர் விமான நிலையத் திட்டப் பகுதி அமைந்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து புதிதாக அமைக்கப்படும் விமான நிலையத்திற்குச் சாலை இணைப்பு மிக வேகமாக இருக்கும். முன்மொழியப்பட்ட விமான நிலையத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.

பெங்களூரு

பெங்களூரு

நகரத்தின் மைய பகுதியில் இருந்து தொலைவில் இருந்தாலும், பெங்களூரு விமான நிலையம் இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது, தூரம் மக்கள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்காது என்பதை நிரூபித்துள்ளது என்றும் தங்கம் தென்னரசு கூறினார்.

வெளிநாடுகள் உதாரணம்

வெளிநாடுகள் உதாரணம்

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் நகரத்தின் மத்தியில் இருந்து தொலைவில் அமைந்துள்ளன. உதாரணமாக, சியோல் (50 கிமீ தொலைவில்), ஜெருசலேம் (55 கிமீ), மிலன் (54 கிமீ) மற்றும் கோலாலம்பூர் (60 கிமீ). சுருக்கமாக, விமான நிலையம் பொருத்த வரையில் விமானப் பயணிகளுக்குத் தூரம் என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது என ஹிந்து பேட்டியில் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.

imageகோவில்பட்டி-க்கு ஜாக்பாட்.. தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Chennai second airport on Parandur, Why not Pannur? What is key reason? Thangam Thennarasu explains

Chennai second airport on Parandur, Why not Pannur? What was the key reason? Thangam Thennarasu explains சென்னை 2வது விமான நிலையம் பரந்தூர்-ல் அமைக்க என்ன காரணம்? தங்கம் தென்னரசு விளக்கம்..!!

Story first published: Monday, August 8, 2022, 19:44 [IST]

Source: https://tamil.goodreturns.in/news/chennai-second-airport-on-parandur-why-not-pannur-what-is-key-reason-thangam-thennarasu-explains-030342.html