சென்னையின் ஸ்டார் ஹோட்டல்களில் சுதந்திர தின சலுகைகள்! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

நாடு முழுவதும் 76-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில், சென்னையில் பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் சுதந்திர தின ஆஃபர் அறிவித்துள்ளன. எந்தெந்த ஹோட்டல்களில் என்ன ஆஃபர் என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே உள்ளது.

ஐடிசி கிராண்ட் சோலா, கிண்டி

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது, ஐடிசி கிராண்ட் சோலா உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களில் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்ராஸ் பெவிலியனில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சுதந்திர தின பஃபே உள்ளது, அதன் விலை நபர் ஒன்றுக்கு ரூ.1,947++ ஆகும். கஃபே மெர்காரா எக்ஸ்பிரஸ் மற்றும் மெட்ராஸ் பெவிலியனில், உங்கள் தாத்தா, பாட்டி உடன் செல்லும் போது சீனியர் சிட்டிசன் சலுகையுடன் உங்களின் மொத்த பில்லில் 75% மட்டுமே செலுத்துங்கள்.

ஷெரட்டன் கிராண்ட் சென்னை ரிசார்ட் மற்றும் ஸ்பா, மகாபலிபுரம்

ஷெரட்டன் கிராண்ட் சென்னை ரிசார்ட் மற்றும் ஸ்பா ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தின ஸ்பெஷலாக, லைவ் பேண்ட் உடன், நாடு முழுவதும் உள்ள உணவு வகைகளை வழங்குகிறது. சாட், கலாவத் கே கபாப், காச்சி ஹல்டி கா பராத்தா, காபுலி பிரியாணி, மட்டன் பாய் பிரியாணி, பஞ்சாபி லசூனி பாலக் மற்றும் பல உணவுகள் மெனுவில் உள்ளன. நேரம் மதியம் 12.30 முதல் மாலை 4.00 மணி வரை மற்றும் விலை ரூ.2,149++ ஆகும்.

நோவோடெல், சேமியர்ஸ் சாலை

நோவோடெல் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உணவு வகைகளை வழங்குகிறது. மீன் பொலிச்சது, மங்களூர் மீன் குழம்பு மற்றும் மெட்ராஸ் மீன் குழம்பு போன்ற சுவையான உணவுகளுடன் சமையல் கலைஞர்களான விஷ்வா, டிசில்வா மற்றும் விக்னேஷ் ஆகியோரின் இந்த மூன்று மாநிலங்களின் சுவைகளை அனுபவிக்கவும்.

பாப்-அப் மெனு ஆகஸ்ட் 21 வரை பாதுகாப்பு வீரர்களுக்கு கிடைக்கும் மற்றும் நேரம் மதியம் 12.30 முதல் மாலை 4.00 மணி வரை, இதன் விலை ரூ.1,999++ ஆகும்.

ஷெரட்டன்

ஃபோர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன், அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களையும் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு மதிய உணவில் 20% தள்ளுபடி வழங்குகிறது. வீரர்கள் முயற்சி செய்ய பலவிதமான இனிப்பு வகைகள் உள்ளன. மதிய உணவுக்கான நேரங்கள் மதியம் 12.30 முதல் 3.30 வரை மற்றும் விலை ரூ.1,200++ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source: https://tamil.indianexpress.com/lifestyle/76th-independence-day-offers-at-chennai-star-hotels-494462/