சென்னை மக்களுக்கான இந்தவார ஷோக்கள்: இசைக் கச்சேரி மற்றும் காமெடி லிஸ்ட் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Tamil News: சென்னை மக்களை இந்த வாரம் மகிழ்ச்சியில் ஆழ்த்தவிருக்கும் மெட்ராஸ் காமெடி சர்க்யூட்டின் இசை விழா முதல் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளின் பட்டியல் இங்கேகொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் BIGSAM இசைக்குழு மற்றும் பிரணதி கண்ணாவுடன் இணைந்து நடக்கவிருக்கும் இசைக் கச்சேரி, சேமியர்ஸ் சாலையில் உள்ள பிளாக் ஆர்க்கிட்டில் இந்த வாரம் நடைபெறவிருக்கிறது.

BIGSAM இண்டி பாப் இசைக்குழுவுடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த கண்ணா, இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளையும் நியூசிலாந்தில் சில நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்த வாரம் ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 8 மணி முதல் இண்டி இசைக் கச்சேரியை சென்னையில் தொகுத்துள்ளனர்.

மெட்ராஸ் காமெடி சர்க்யூட்டின் (எம்.சி.சி.) மெட்ராஸ் காமெடி ஷோ 4.0 நமது சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராம்குமார், யோகேஷ் ஜெகநாதன், அபிஷெய்க் விஜய்குமார் மற்றும் குணா கண்ணன் போன்ற நகைச்சுவை நடிகர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 20 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி முதல் நடைபெறவுள்ளது.

(Source: Instagram/@phoenixmarketcitychennai)

மேலும், சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில், ராஸ்மாதாஸ் இசை விழாவிற்காக வரிசையாக இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. வயலினிஸ்ட் அல்லாத திட்டத்திற்காக, திறமையான பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் குழு இந்நிகழ்வுக்காக ஒன்று சேருகிறது. நித்யஸ்ரீ வெங்கட்ராமன், பிஜோர்ன் சுர்ராவ், ஷ்ரவன் ஸ்ரீதர், மகேஷ் ராகவன் மற்றும் கே எஸ் ஹரிசங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வு, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு 7 மணி முதல் நடக்கவுள்ளது.

‘ஒரசாத’ மற்றும் ‘நீயே’ போன்ற வெற்றிப் படங்களுக்கு பெயர் பெற்ற விவேக் மற்றும் மெர்வின் ஜோடி, ஆகஸ்ட் 20-ம் தேதி (சனிக்கிழமை) சென்னை மக்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அவர்கள் பீனிக்ஸ்ஸில் நடைபெறும் ராஸ்மாதாஸ் இசை விழாவின் ஒரு பகுதியாக மேடைக்கு வரவுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/entertainment/chennai-tamil-news-music-concert-and-standup-shows-on-chennai-495360/