சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் – தினமணி

சென்னைச் செய்திகள்

மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

தில்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன் கிழமை இரவு சென்னை திரும்பினார். 

தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை நேரில் சந்தித்த நிலையில், சென்னை திரும்பினார். 

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 16) நள்ளிரவு தில்லி சென்றடைந்தாா். சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட அவா், நள்ளிரவில் தில்லிக்கு சென்றாா்.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கரைச் சந்தித்து, புதிதாகத் தோ்வு செய்யப்பட்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முா்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இன்று மாலை 4 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதில், தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து, முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்தார். 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/aug/17/cm-stalin-returned-to-chennai-3900053.html