சென்னை: முன்பு கொலை வழக்கில் கைதானவர்கள்… இப்போது கொள்ளை வழக்கில் சிக்கியது எப்படி?! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட குழந்தைவேலு, ஸ்டீபன், மணிகண்டன் ஆகியோர், கடந்த 2021-ம் ஆண்டு புழல் பகுதியில் உள்ள காவலர் ஒருவரின் வீட்டின் பூடை உடைத்து தங்க நகைகளைத் திருடியுள்ளனர். அந்த வழக்கில் 17 சவரன் தங்க நகைகள் கொள்ளைப் போயிருந்தன. அந்த 17 சவரனும், தற்போது பெருமாள் வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 23 சவரன் நகைகளையும் சேர்த்து 40 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு ராடு, பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்.

மணிகண்டன்

கைது செய்யப்பட்ட குழந்தைவேலு, ஸ்டீபன் ஆகிய இருவரும் புழல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள். குழந்தைவேலு மீது ஒரு கொலை வழக்கு, கஞ்சா வழக்கு, வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது உள்ளிட்ட7 வழக்குகள் உள்ளன. ஸ்டீபன் மீது ஒரு கொலை வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளது. விசாரணைக்குப்பிறகு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். குழந்தைவேலும் ஸ்டீபனும் கடந்த சில மாதங்களுக்கு முன் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் ஆட்டோ டிரைவர் மதன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் பெருமாள் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/in-theft-case-police-arrested-3-accused-in-chennai