ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா?.. சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் அணி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சியின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார்.

எடப்பாடி VS ஓபிஎஸ்! யாருக்கு வெற்றி? அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு! நாளை ஹைகோர்ட் தீர்ப்பு?எடப்பாடி VS ஓபிஎஸ்! யாருக்கு வெற்றி? அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு! நாளை ஹைகோர்ட் தீர்ப்பு?

ஓபிஎஸ் மேல்முறையீடு

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே இரு வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டது.

எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ் , வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதையே தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார்.

நீதிபதி ஜெயசந்திரன்

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎல், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இன்று தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்பது குறித்த எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தீர்ப்புதான் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் என தெரிகிறது.

English summary
Chennai Highcourt gives verdict on AIADMK General Committee Meeting which was filed by O Panneer Selvam and Vairamuthu (அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.).

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-highcourt-gives-verdict-on-aiadmk-general-council-meeting-471201.html