மிஸ் பண்ணிட்டோமே.. கூவம் நதிக்கரையினிலே.. பூந்தமல்லி அழகினிலே.. ஹேப்பி பர்த்டே சென்னை:#மெட்ராஸ் டே – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: “மெட்ராஸ் டே” சிறப்பாக கொண்டாடப்பட அவசியமும், தேவையும் இன்றைய காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ளது.. ஏன் தெரியுமா?

Recommended Video

image

TamilNadu Day | தமிழ்நாட்டின் பெருமை மிகு புள்ளிவிபரம் *TamilNadu

சென்னை என அழைக்கப்படும் மெட்ராஸை பொறுத்தவரை இந்தியாவின் 4வது பெரிய நகரம்.. தென் இந்தியாவின் நுழைவாயில்.. மெட்ராஸுக்கென்று ஸ்பெஷலான தொழில், அமைப்புகள் என்று எதுவும் இல்லாததே மெட்ராஸின் ஸ்பெஷாலிட்டி ஆகும்.

நம்ம மெட்ராஸுக்கு 383 வயதாகிவிட்டதாம்.. உண்மையிலேயே 383 வயதுதானா என்ற சந்தேகமும் நமக்கு இயல்பாகவே எழுகிறது.. இதற்கு சில காரணங்களும் உண்டு..

Madras Day: மறக்கப்பட்ட தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரும் சென்னை சுகுண விலாச சபையும்Madras Day: மறக்கப்பட்ட தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரும் சென்னை சுகுண விலாச சபையும்

புலியூர் கோட்டம்

முதலாவதாக, 2000 வருடங்களுக்கும் அதிகமான பழமையான வரலாறு கொண்டது மெட்ராஸ் என்கிறார்கள்.. எழும்பூர், மயிலாப்பூர், சாந்தோம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருவான்மியூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் இப்படிப்பட்ட பகுதிகள் எல்லாம் அன்றைய காலங்களில் தனித்தனி பெயர்களில் இல்லாமல், மொத்தமாக சேர்த்து புலியூர்க்கோட்டம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.. 2000 வருடங்களுக்கு முன்பே குரும்பர்கள் எனப்படுபவர்கள் இங்கு ஆட்சி செய்ததாக வரலாற்று சான்றுகளும் உள்ளன. இந்த குரும்பரர்களுக்கு பிறகுதான், சோழர்கள், பல்லவர்கள் என்று அடுத்தடுத்து பலரும் வந்து, கடைசியில் ஆங்கிலேயரின் கைக்கு சென்றிருக்கிறது.. அப்படியானால் மெட்ராஸின் வயது என்ன? நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

மதராஸப்பட்டிணம்

இரண்டாவதாக, 9-ம் நூற்றாண்டிற்கும் முந்தைய காலக்கட்டத்திலேயே மதராஸபட்டணத்தின் பெயர் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் இருக்கிறதாம்.. மெட்ராஸில் உள்ள கட்டிடங்களை எடுத்து கொண்டால், அவை டச்சுக்காரர்கள் கட்டப்பட்டவையாகும்.. அதற்கு பிறகுதான் பிரிட்டிஷ்காரர்கள் நிறைய கட்டிடங்களை கட்டியிருக்கிறார்கள்.. அதாவது, 500 ஆண்டுகள்தான் இவர்களின் கட்டிட வரலாறு தற்போது உள்ளது.. அப்படியானால், 2 ஆயிரம் வருட பழமை என்று சொல்வதற்கான தடயங்கள், ஆதாரங்கள், எங்கே போயின? இயற்கை சீற்றத்தில் அவ்வளவும் அழிந்திருக்குமா? அல்லது அழிக்கப்பட்டிருக்குமா? ஆழமாகவும், விரிவாகவும் அறிய வேண்டிய கேள்வி இது..!

பீச் + ஜார்ஜ் டவுன்

மூன்றாவதாக, கபாலீசுவரர் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது.. ஆனால், அதன் கட்டுமானங்கள், விஜயநகர அரசர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள்.. பார்த்தசாரதி கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டி உள்ளனர்.. ஜார்ஜ் டவுனில் பீச்சுக்கு பக்கத்தில் உள்ள காளிகாம்பாள் கோவில் 1640-ம் வருடம் கட்ட துவங்கப்பட்டு 1678-ல் கட்டி முடிக்கப்பட்டதாம்.. செயின்ட் மேரி சர்ச் 1680ல் கட்டப்பட்டுள்ளது.. அர்மீனியன் சர்ச் 1712-ல் அர்மீனியர்களால் கட்டப்பட்டது.

மெட்ராஸ் வயது

அதுமட்டுமல்ல, திருவொற்றியூர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருமுல்லைவாயில் உள்ளிட்ட கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள், ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழைய கோயில்களை கொண்டுள்ளது என்பதால், இந்த நகரம் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே சிறப்பான, புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அப்படியானால் மெட்ராஸின் வயது என்ன? நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

ஸ்பென்சர் பிளாசா

பழமைகளின் அடையாளங்களும், அதற்கான தடங்கள் நிறைய அழிக்கப்பட்டுள்ளன.. அழிக்கப்பட்டும் வருகின்றன.. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றுதான் கூவம் ஆறு எனப்படும் பக்கிங்காம் கால்வாய்.. மெட்ராஸ் என்றால் இப்போதுவரை சென்ட்ரல் ஸ்டேஷனைதான் சினிமாவில் காட்டி கொண்டிருக்கிறார்கள்.. அதைவிட்டால், ஸ்பென்சர் பிளாசா, ஜெமினி பிரிட்ஜ், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், அல்லது கலர் கலர் ஷாப்பில் மால்கள் என்ற மார்டன் அடையாளங்களை முன்னிறுத்தும்போக்கு நவீன சினிமாவிலும் தலைதூக்கி வருவது வருத்தமாக உள்ளது..

வடசென்னை

இதே மெட்ராஸில்தான், “வடசென்னை” என்ற இருள் பகுதியும் வெளிச்சமின்றி மங்கி கிடக்கிறது.. அந்த கறுப்பு நகரத்தை பற்றியோ, மேற்கில் இருக்கும் பூந்தமல்லியை பற்றியோ ஒருத்தரும் வாய்திறந்து பேசுவது இல்லை என்பது கவலைக்குரியது.. இந்த நகரத்தின் அங்கமான இந்த பகுதிகளை, பெரும்பாலானோர், ஆவணப்படுத்துவதும் இல்லை என்பது வியப்புக்குரியது. இன்றைக்கு கூவம் என்று மூக்கை மூடிக்கொண்டு சொல்கிறார்களே, இதே கூவம் என்ற அடையாறு பக்கிங்காம் நீர்நிலைதான், மெட்ராஸை அன்று வளமான பகுதியாக வைத்திருந்திருக்கிறது.

வடிகால்

இந்த தண்ணீரைதான் நம் முன்னோர்கள் குடித்து வந்துள்ளனர்.. இதில் வாணிபத்திற்காக படகு போக்குவரத்தே நடந்துள்ளது. மீன்பிடி தொழிலும் நடந்துள்ளது.. அவ்வளவு ஏன், படகுப்போட்டியும் நடந்துள்ளன.. ஒருகாலத்தில் புண்ணிய நதியாக வர்ணிக்கப்பட்ட கூவத்தை, கெடுத்து சாக்கடையாக்கிவிட்ட, புண்ணியவான்கள் யாரென்று தெரியவில்லை.. கடந்த 2004-ல் சுனாமி வந்தபோது, இந்த ஆறு ஒரு வடிகாலாக செயல்பட்டதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. இந்த கூவம் இருப்பதால்தான், அன்று சென்னை அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது..

பக்கிங்காம்

இந்த கூவத்தை தூய்மைப்படுத்தும் திட்டம் எப்போதோ தொடங்கப்பட்டது என்றாலும், அவைகளின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.. திட்டங்கள் எவ்வளவோ வந்தாலும், கூவம் அதுபாட்டுக்கு தன் போக்கில் பயணித்து கொண்டே இருக்கிறது.. மெட்ராஸ் டே என்ற கொண்டாட்டத்தில், நாம் பழமையின் சிறப்புகளை மட்டுமே சொல்லாமல், மண்ணோடு மண்ணாக மக்கி போய்விட்ட அந்த பழமைகளையும் மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கையில் இனியாவது களமிறங்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

மெட்ராஸ் + ஸ்பெஷல்

அதுமட்டுமல்ல, மெட்ராஸ் டே-வை சிறப்பாக கொண்டாட வேண்டிய தேவையும் நமக்கு இருக்கிறது.. இந்த மெட்ராஸின் சிறப்புக்களை பட்டியலிட்டு சொல்லிவிட முடியாது.. எந்த தொழிலுமே செய்வதற்கான இடமாக விளங்க தொடங்கியது மெட்ராஸ்தான்.. எந்த மொழியும் காற்றில் கரைந்து உலவும் இடமானது மெட்ராஸ்தான்.. எந்த இன மக்களும் இயல்பாக நடமாடும் உரிமையை தந்தது மெட்ராஸ்தான்.. தங்கள் ஊர்களில் செய்துவரும் விவசாயம், தொழில், என எது படுத்துவிட்டாலும் என்ன, இருக்கவே இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதும் மெட்ராஸ்தான்.. மெட்ராஸ் என்ற தாய், வந்தாரை வாழ வைப்பவள், காலங்கள் உருண்டபோதும் தாய்மை எனும் இயல்பை ஒருபோதும் அவள் மாற்றி கொண்டதே கிடையாது.

ஹேப்பி பர்த்டே மெட்ராஸ்

ஹைடெக் தொழில்முதல் கூலி தொழில்வரை என தன்னை நம்பி வந்த அனைவரையுமே தாங்கி பிடிப்பாள்… நம்பி வந்தோருக்கு சென்னை இருகரம் கூப்பி வரவேற்று மடியில் இளைப்பாற இடம் தருவாள்.. சிறிது நாளில் நாகரீகத்தின் உச்சத்தில் உன்னை தூக்கி நிறுத்தி பார்ப்பாள்.. நீ என்ன சொன்னாலும் கேட்பாள்… என்ன பாஷையில் திட்டினாலும் உன்னை பொறுத்து கொள்வாள். ஆனால் ஒருபோதும் உன்னை வீணாக விட்டு விடவே மாட்டாள். பழமையும் புதுமையும் கலந்து காலத்துக்கும் புகழ் பரப்பி வரும் மெட்ராஸின் பிறந்த நாளை சேர்ந்து கொண்டாடுவோம்… ஹேப்பி பர்த்டே மெட்ராஸ்..!

English summary
383 madras day: How old is the real Chennai and Madras day is celebrated every august 22 கூவம் நதியின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்

Source: https://tamil.oneindia.com/news/chennai/383-madras-day-how-old-is-the-real-chennai-and-madras-day-is-celebrated-every-august-22-471713.html