சென்னை: கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை – வடமாநிலத்தவர் தலைமறைவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் தாஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தீஸ் ஷேக். இவர்கள் இருவரும் சென்னையை அடுத்த நாகலூர் பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ரத்தீஸ் ஷேக் சங்கர் தாசை அடித்து கீழே தள்ளியதில் அவருக்கு தலையில் பின்புறம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு சென்று விட்டனர். இந்நிலையில், சங்கர் தாஸ் காலையில் வேலைக்கு வராததால் அவரை சக தொழிலாளர்கள் பார்க்க சென்றுள்ளனர். அப்போது சங்கர் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் சங்கர் தாசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சங்கர் தாசை தாக்கிய ரத்தீஸ் ஷேக் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-construction-worker-beaten-to-death-northerner-absconding-778674