சென்னை புறநகரில் திடீர் மழை 2 விமானங்கள் திருப்பிவிடப்பட்டது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

துபாயில் இருந்து 216 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் பக்ரைனில் இருந்து 182 பயணிகளுடன் வந்த விமானமும் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி அனுப்பப்பட்டது.

மதுரை, லக்னோ, திருச்சி, மும்பை, டெல்லி ஆகிய விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானிலேயே சிறிதுநேரம் வட்டமடித்துவிட்டு தாமதமாக தரையிறங்கியது.

மேலும் சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, பெங்களூரூ ஆகிய நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/2-flights-diverted-due-to-heavy-rain-in-chennai-suburbs-779401