சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை.. செம்ம ஜில் கிளைமேட்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.

மேலும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை அறிக்கையில், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்; தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

27, 28, 29, 30 தேதிகளில் நனைகிறது தமிழகம்.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எங்கேன்னு பாருங்க27, 28, 29, 30 தேதிகளில் நனைகிறது தமிழகம்.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எங்கேன்னு பாருங்க

English summary
Chennai got moderate Rain from today morning. Chennai will get Light to Moderate Rain For Next Few Days.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-gets-moderate-rain-today-473073.html