அல்டிமேட் கோ கோ லீக் – அரை இறுதியில் சென்னை அணி | ultimate kho kho – Chennai team in semi-final – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

புனே: அல்டிமேட் கோ கோ லீக்கில் சென்னை குயிக் கன் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

புனேவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி, மும்பை கில்லாடிஸை எதிர்த்து விளையாடியது. இதில் சென்னை அணி 58-42 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ராம்ஜி காஷ்யப் 11 புள்ளிகளும், நரசய்யா 14 புள்ளிகளும் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை குயிக் கன் அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்றுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/sports/858865-ultimate-kho-kho-chennai-team-in-semi-final.html?frm=rss_more_article