என்னங்க இது? திருச்சி – சென்னை ஹை-வேயில் வந்த மக்களுக்கு பெரும் குழப்பம்.. இப்படி நடந்ததே இல்லையே! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: திருச்சி – சென்னை, சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக தீவிரமாக கனமழை பெய்து வந்தது. இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மைய அறிக்கைபடி, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாட்டில் வானிலை என்ன? எங்கெல்லாம் மழை பெய்யும்.. சுட சுட வந்த வெதர் ரிப்போர்ட்!இன்று தமிழ்நாட்டில் வானிலை என்ன? எங்கெல்லாம் மழை பெய்யும்.. சுட சுட வந்த வெதர் ரிப்போர்ட்!

நேற்று மழை

நேற்று சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்தது. இதனால் நேற்று பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திருச்சி டூ சென்னை செல்ல வேண்டிய பலர் மழை காரணமாக பயண திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நேற்று மாலைக்கு பின் மழை பெரிதாக பெய்யவில்லை.

மழை இல்லை

நேற்று மாலைக்கு பின் சென்னையில் பெரிதாக மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும் இன்று இதுவரை மழை பெய்யவில்லை. இந்த நிலையில்தான் இன்று திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த மக்கள் பலர் மோசமான பனிப்பொழிவு காரணமாக அவதிப்பட்டனர். இன்று காலை 5 – 7 மணி வரை சாலைகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. அதோடு பனிமூட்டமும் கடுமையாக இருந்தது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

உளுந்தூர்பேட்டை

திருச்சி முதல் உளுந்தூர்பேட்டை வரை பனிப்பொழிவு மோசமாக இருந்தது. பொதுவாக ஆவணி மாதத்தில் இது போன்ற பனிப்பொழிவு இருக்காது. அதோடு மழை பெய்த மறுநாளே பனிப்பொழிவு இருக்காது. இருந்தாலும் இன்று திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக திணறினார்கள். வாகனங்களை ஓட்ட முடியாமல் பலர் வாகனங்களை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு காத்து இருந்தனர். சேலம் – சென்னை நெடுஞ்சாலையிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

கண்ணுக்கு தெரியவில்லை

பனிப்பொழிவு காரணமாக 100 மீட்டருக்கு அப்பால் வந்த வாகனங்கள் எதுவும் தெரியாத நிலை ஏற்பட்டது. இப்படி பருவம் மாறி பெய்த பனிபொழிவால் மக்கள் குழப்பம் அடைந்தனர். காலநிலை மாற்றம் உலகம் முழுக்க பல நாடுகளை பாதித்து வருகிறது. பல நாடுகளில் வானிலை பருவம் மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் பருவம் மாறி திடீர் பனிபொழிந்துள்ளது.

English summary
Tamilnadu Weather: Sudden fog confuses people in Trichy – Chennai – Salem High Way early in the morning.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weather-sudden-fog-confuses-people-in-trichy-chennai-salem-high-way-473684.html