சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.37,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.4,722-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.58.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.58,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-the-price-of-jewelery-gold-is-rs-56-rise-783843