சென்னையில் திடீரென கடும் டீசல் தட்டுப்பாடு- ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் வாகனங்கள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எதிர்கொண்டன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்ட போதும் கணிசமான அளவு விலை குறையவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 107 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. சென்னையில் 107-வது நாளாக இன்றும் 1 லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும் 1 லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் கையிருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. டீசல் தட்டுப்பாடு திடீரென ஏற்பட்டதால் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறையும் கச்சா எண்ணெய்! குறையாத பெட்ரோல் விலை! வரும் காலத்திலும் இதே நிலைதான்! என்ன காரணம் தெரியுமாகுறையும் கச்சா எண்ணெய்! குறையாத பெட்ரோல் விலை! வரும் காலத்திலும் இதே நிலைதான்! என்ன காரணம் தெரியுமா

இது தொடர்பாக நாம் விசாரித்த போது, கச்சா எண்ணெய்வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்ட தடை, தாமதம் ஆகியவற்றால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையான துயரத்துக்கு இடையே எதிர்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு திடீரென ஏற்பட்டிருக்கும் டீசல் தட்டுப்பாடு எப்போது சரியாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பு.

English summary
According to the reports Chennai Faces diesel Shortage today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-faces-diesel-shortage-today-474146.html