ஆஹா! ஒளிரப்போகிறது சென்னை: ரூ.33.57 கோடி ஒதுக்கீடு – தினமணி

சென்னைச் செய்திகள்

ஒளிரப்போகிறது சென்னை

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை வெகு விரைவில் 5,594 தெரு விளக்குகளால் ஒளிரப்போகிறது.

சென்னை முழுவதும் 5,594 தெரு விலக்குகள் மற்றும் 85 உயர் மட்ட விளங்குகள் அமைக்க ரூ.33.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை முழுவதும் 2,91,415 எல்இடி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை சென்னை மாநகராட்சியின் மின்துறை பராமரித்து வருகிறது.

பல்வேறு கட்ட வலியுறுத்தல்களைத் தொடர்ந்து, நிர்பயா திட்டத்தின் கீழ், சென்னை முழுவதும் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சரி எந்தெந்த மண்டலங்களுக்கு எத்தனை தெரு விளக்குகள் வரப்போகிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/sep/07/chennai-streetlights-3912007.html