சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் GIG ஊழியர்களின் தேவையும், சேவையும் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது.

இப்படியிருக்கும் நிலையில் வேலைவாய்ப்பு கிடைக்காத பலர் தற்போது போதுமான வருமானத்தை ஈட்ட ஓரே நேரத்தில் பல வேலைகள் செய்வது என்பது முன்பெல்லாம் கடினமான இருந்தாலும், இன்றைய இண்டர்நெட் உலகில் மிகவும் எளிதானது.

இப்படித் தான் சென்னையில் ஒருவர் ஓரே நேரத்தில் ஸ்விக்கி, ரேபிடோ, டன்சோ நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு கடும் எதிர்ப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் வைத்த செக்..!

சென்னை

சென்னை

சென்னையில் ஒரு பெண் தனது ரேபிடோ டிரைவர் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளை எவ்வாறு செய்கிறார் என்பதை லிங்கிடுன் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இவருடைய பதிவுக்கு ஓரே நாளில் 9600 லைக்குகள், 283 கமெண்ட் குவிந்துள்ளது.

ஸ்வேதா சங்கர்

ஸ்வேதா சங்கர்

ஸ்வேதா சங்கர் என்பவர் ரேபிடோ என்ற பைக் டாக்ஸி ஆப் மூலம் சவாரி செய்ய முன்பதிவு செய்திருந்தார். இப்போது ஸ்வேதா-வை பிக் செய்ய வந்த ரேடிபோ டிரைவர் ஸ்விக்கி யூனிபார்ம் அணிந்து, டன்சோ நிறுவன பே கொண்டு வந்ததைப் பார்த்துள்ளார் ஸ்வேதா.

ரேபிடோ சவாரி

ரேபிடோ சவாரி

இதுகுறித்து ஸ்வேதா சங்கர் செய்த பதிவில் “நேற்று ரேபிடோ-வில் சவாரி செய்தேன். ஓட்டுநர் அண்ணா ஸ்விக்கி யூனிஃபார்ம் அணிந்து டன்ஸோ பையை வைத்திருப்பதைப் பார்த்தேன். அவர் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இந்திய ஸ்டார்ட்-அப்களில் வேலை செய்கிறார் என அறிந்துகொண்டேன் எனப் பதிவிட்டு உள்ளார்.

கிக் ஊழியர்கள்

கிக் ஊழியர்கள்

இந்தியாவின் முக்கியத் தூண் ஆக மாறி வரும் கிக் ஊழியர்கள் தற்போது ஓரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான நிறுவனத்தில் பணியாற்றி நேரத்தை வீணாக்காமல் குறுகிய காலத்தில் அதிகப்படியான டிரிப் முடித்து அதிகப் பணத்தைச் சம்பாதித்து வருகின்றனர்.

e-shram தளம்

e-shram தளம்

இப்பிரிவு ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்க நிறுவனங்களும் சரி, அரசும் சரி பல உதவிகளைச் செய்து வருகிறது. இப்பிரிவு ஊழியர்களுக்காக e-shram தளத்தை உருவாக்கி 2 லட்சம் ரூபாய் வரையிலான விபத்துக் காப்பீட்டை Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) திட்டத்தின் வாயிலாக இலவச பாதுகாப்பு அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Chennai man’s love triangle: Works for Swiggy, Rapido and Dunzo at the same time

Chennai man’s love triangle: Works for Swiggy, Rapido and Dunzo at the same time

Story first published: Thursday, September 8, 2022, 22:18 [IST]

Source: https://tamil.goodreturns.in/news/chennai-man-s-love-triangle-works-for-swiggy-rapido-and-dunzo-at-the-same-time-031085.html