சென்னை காலநிலை மாற்றம் – எதிர்கொள்வது எப்படி? பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.. – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றதை எதிர்கொள்ள உலகின் அனைத்து நகரங்களும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைத்து பெரு நகரங்களும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னைக்கான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு பிரச்சினையை எதிர்கொள்ள கடந்த 2005 அக்டோபரில் தொடங்கப்பட்ட ‘சி40 மேயர்கள்’ அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை தயார் செய்வதற்கு முன்பாக பல்வேறு அரசு துறைகள், காலநிலை மாற்றம் தொடர்பாக செயல்படும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியது.

ALSO READ | மதுரவாயலில் பாலியல் உறவுக்கு அழைத்து கத்தியைக் கட்டி வழிப்பறி.. திருநங்கைகள் மீது புகார்

இதன்படி “நெகழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகளில்  இந்த செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கதக்க மின்சாரம் – 8 இலக்குகள்; 2050ம் ஆண்டுக்குள் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்பாடு, அனல் நிலையங்களுக்கு மாற்றாக புதுப்பிக்க தக்க எரிசக்தி உற்பத்தி வீடுகள், சோலார் மின் உற்பத்தி பயன்பாட்டை அதிகரிப்பது.

குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் கட்டுமானங்கள் – 8 இலக்குகள்; அனைத்து கட்டிடங்களையும் குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைப்பது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

போக்குவரத்து – 10 இலக்குகள்; 2050ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார பேருந்துகள்.80 சதவீத பயணங்களை பொது போக்குவரத்து, நடப்பது, சைக்கிள் மூலம் மேற்கொள்ளும் வகையில் திட்டங்கள் செயல்படுத்துவது.இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத் திட்டத்தை செயல்படுத்துவது.

ALSO READ | மாணவர்களுக்கான ‘சிற்பி’ எனும் புதிய திட்டம் இன்று தொடக்கம் – என்ன சிறப்பு அந்த திட்டத்தில்?

திடக் கழிவு மேலாண்மை – 11 இலக்குகள்; கழிவுகளை 100 சதவீதம் தரம் பிரித்து அளிப்பது. கழிவுகள் மறு சுழற்சி செய்யும் வசதிகளை அதிகரிப்பது.

வெள்ள மேலாண்மை – 17 இலக்குகள்;வெள்ள தடுப்புக்கு ஏற்ற வகையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துவது நீர் வள பாதுகாப்பு மேலாண்மைபேரிடர் பாதிப்பு குறைக்கும் திட்டங்களை செயல்படுத்துவது.

எளிதில் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் சுகாதாரம் – 12 இலக்குகள்; மக்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வகையிலான வீடுகள்காலநிலை மாற்றத்தால் சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு

பொதுமக்கள் அக்டோபர் 26-ம் தேதிக்குள் இது தொடர்பான கருத்துகளை [email protected] என்ற இ-மெயில் முகவரியில் கருத்துகளை தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/chennai-climate-change-action-plan-draft-report-released-801658.html