ஒரே நாளில் 100 குழந்தைகள்! காய்ச்சலால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்! என்ன காரணம்? ஷாக்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா, தக்காளி காய்ச்சல், குரங்கு அம்மை என பல நோய்கள் குழந்தைகளை குறி வைத்து தாக்கி வந்த நிலையில் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

போதிய தடுப்பூசிகள், மருத்துவ கட்டமைப்பு, உடனடி சிகிச்சை உள்ளிட்டவே காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தலைநகரான சென்னையில் வசிக்கும் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது ஒரு விவகாரம்.

மறந்துபோன தேதி.. மை கசிந்த போனா.. ‛‛கடவுளே’’ என புலம்பி கையெழுத்திட்டு பிரிட்டன் மன்னரான சார்லஸ்!மறந்துபோன தேதி.. மை கசிந்த போனா.. ‛‛கடவுளே’’ என புலம்பி கையெழுத்திட்டு பிரிட்டன் மன்னரான சார்லஸ்!

சென்னையில் காய்ச்சல்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு இருமல் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குழந்தைகளுடன் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

அறிகுறிகள்

தற்போது சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பெரும்பாலும் சளி இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய தொந்தரவுகளே உள்ளது. அதே நேரத்தில் குழந்தைகள் அதிக அளவில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது காலநிலை மாற்றம் திடீர் மழை உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக காய்ச்சல் பரவி வருவதாக கூறப்பட்டு வந்தாலும் இது என்ன வகையான காய்ச்சல் என்பது பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இதன் காரணமாக சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குவியும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உள் நோயாளிகள் பிரிவு

பல மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் பிரிவு நிரம்பி விட்டதாக கூறப்படுகிறது. புதன்கிழமையான இன்றும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல், சளி இருமல் தொந்தரவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக தங்களது குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர் குவிந்தனர். மருத்துவர்கள் பரிசோதித்த போது பல குழந்தைகளுக்கு காய்ச்சலின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதை தொடர்ந்து இன்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள்

மேலும் காய்ச்சல் இருமல் ஆகிய தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. காய்ச்சல் மூன்று அல்லது நான்கு நாட்களில் குறைந்தாலும் இருமல் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கிறது எனவும் வழக்கத்தை விட கூடுதலாக சிகிச்சை பெறுவதின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

என்ன வகையான வைரஸ்?

தற்போது குழந்தைகளுக்கு பரவி வருவது என்ன வகையான வைரஸ் என்பது குறித்து பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் குழந்தைகளின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வானிலையில் நிலவும் மாற்றம் தற்போது பரவும் சளி காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவுகளுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கடுமையான காய்ச்சல் களைப்பு உடல் நடுக்கம் உடல் வலி தொண்டையில் வறட்சி வயிற்றுவலி ஆகியவை தற்போது அறிகுறிகளாக தெரிவதாகவும் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக கவசம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

English summary
In Chennai, the capital of Tamil Nadu, the number of people suffering from fever has been increasing for the past few days. More than a hundred children have been admitted for treatment in a single day at the Children’s Hospital in Egmore, which has shocked the parents.

Source: https://tamil.oneindia.com/news/chennai/sudden-increase-in-number-of-children-affected-by-fever-in-chennai-475673.html