ஆபரேஷன்.. சென்னையில் ஏர்போர்ட்டிலிருந்து அடுத்தடுத்து அப்புறப்படுத்தப்பட்ட விமானங்கள்.. என்னாச்சு? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்த பல்வேறு ராட்சச விமானங்கள் திடீரென அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையம் மீண்டும் பிசியாக தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு பின்பாக சுணக்கம் கண்டு இருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கி உள்ளது.

சென்னைக்கு வர கூடிய விமானங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னை விமான நிலையம் அதிக நெருக்கடி கொண்ட விமான நிலையமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று 15 வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சென்னையில் இரண்டாவது விமானம் நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'4 கட்டம்’ 22ஆம் தேதி என்ன நடக்குதுனு பாருங்க! திடீரென களத்தில் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!‘4 கட்டம்’ 22ஆம் தேதி என்ன நடக்குதுனு பாருங்க! திடீரென களத்தில் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

புதிய ஏர்போர்ட்

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பல அகற்றப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையின் தென் பகுதியில் பல்வேறு ராட்சச விமானங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இங்கே பல காலமாக இந்த விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இயங்கவில்லை

இந்த விமானங்கள் எங்கும் இயக்கப்படவில்லை. இதனால் இவை பாழடைந்து காணப்பட்டது. மழை, வெயிலில் இருந்ததால் விமானத்தின் நிறம் மங்கி, பாசி படிந்து, மிகவும் மோசமான நிலையில் இந்த விமானங்கள் காணப்பட்டன. ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 12 விமானங்கள் இப்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானங்கள் இப்படி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானங்கள் நிறுத்தப்பட்டு சில வருடங்கள்ஆகிவிட்டன.

ஆபரேஷன்

கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் ஆகும் இது. இந்த விமானங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையம் சார்பாக அந்த நிறுவனங்களுக்கு சில நாட்களுக்கு முன்பே உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் விமானத்தை அப்புறப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில் அதிகாரிகளே அந்த விமானங்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதற்கான ஆபரேஷனை அவர்களே கையில் எடுத்துள்ளனர்.

புதிய விமானம்

இதன் மூலம் அங்கு புதிய விமானங்களை நிறுத்த இடம் கிடைக்கும். கூடுதல் விமானங்களை அங்கே நிறுத்த முடியும். அதோடு இந்த விமானங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதற்கான கட்டணம் அந்த நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். அங்கே இவ்வளவு நாட்கள் விமானத்தை பார்க் செய்து வைத்து இருந்ததற்கான பார்க்கிங் கட்டணமும் விமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விமான நிலையத்தில் அதிக இடவசதி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Why are few air planes being removed from the Chennai Airport early in the morning?

Source: https://tamil.oneindia.com/news/chennai/why-are-few-air-planes-being-removed-from-the-chennai-airport-475769.html