சென்னை ஓபன் டென்னிஸ் காலிறுதியில் மாக்தா – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் நடைபெறும் உலக மகளிர் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில் காலிறுதியில் விளையாட  போலாந்து வீராங்கனை மாக்தா லினெட் தகுதிப் பெற்றுள்ளார்.
சென்னை நுங்கை அரங்கில் நடக்கும் சென்னை ஓபன் போட்டியில் ஒற்றயைர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்களும், இரட்டையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்களும் நடந்தன. நடுகளத்தில் நடந்த  2வது சுற்றில் நேற்று போலாந்து வீராங்கனை மாக்தா லினெட்(30வயது, 67வது ரேங்க்),  ரஷ்ய வீராங்கனை ஒக்சனா செலேகமேடேவா(19வயது, 142வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.

அதில் மாக்தா ஒரு மணி  23 நிமிடங்களில்  6-2, 6-0 என நேர் செட்களில் ஒக்சனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் 2வது களத்தில் நடந்த  இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பியங்டர்ன் பிலிப்ச்(தாய்லாந்து),   கியோகா ஒகமுரா(ஜப்பான்) இணை 50 நிமிடங்களிலேயே 6-2, 6-0 என நேர் செட்களில் ஜெஸ்டினா மிகுல்ஸ்கைட்(லிதுவேனியா), எமிலி ஸ்மித்(பிரிட்டன்) இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு  முதல்  இணையாக முன்னேறியது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=799420