சென்னை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பல் மிட்ஜெட் – காரணம் என்ன? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மிக கடினமான சூழல்களில் செயல்படும் ‘மிட்ஜெட்’ எனும் அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வந்தடைந்தது. 

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘மிட்ஜெட்’ எனப்படும் போர்க்கப்பல் நேற்று சென்னை துறைமுகத்துக்கு வந்தது. இந்த கப்பல் அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பல்களில் மிகப்பெரியதும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதும் ஆகும். அமெரிக்க கடலோர காவல்படையின் முக்கிய அங்கமாக திகழும் இந்த கப்பல் சவாலான செயல்பாடுகளில் ஈடுபடும் திறன் கொண்டது.

ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான தளத்தையும், மிக கடினமான கடல் சூழல்களில் செயல்படும் திறனையும் இந்த கப்பல் கொண்டுள்ளது. வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள், கணினி, நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன உபகரணங்களை இந்த கப்பல் கொண்டுள்ளது. 418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்ட இந்த கப்பலுடன் 23 அதிகாரிகள், 120 மாலுமிகளும் வந்துள்ளனர்.

ALSO READ : தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகம்!

இந்த கப்பலை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தோ பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக இந்தியா திகழ்கிறது. மிட்ஜெட்டின் சென்னை பயணம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டு செயல்பாடுகள், சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ பசிபிக் பகுதிக்கான லட்சியத்தை நோக்கிய நமது உறவை மேலும் வலுவாக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்த கப்பல் 19ஆம் தேதி வரை சென்னையில் நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/418-feet-long-54-feet-high-us-warship-arrives-at-chennai-803432.html