மேலும், விரிவடைகிறது சென்னை மாநகராட்சி.. இனி அரக்கோணம் வரை சிட்டிதான்! அதிரடி முடிவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னை பெருநகர எல்லையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3ம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகரத்திற்கு 2027 முதல் 2046 வரையிலான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான கருத்தரங்கு கூட்டம் அமைச்சர்கள் அன்பரசன், முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.அதேபோல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சிஎம்டிஏ-வின் உயர் அதிகாரிகள் என முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சென்னை 2ஆவது விமான நிலையம் அமையும்.. பரந்தூர் வரை வருகிறது மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஏர்போர்ட் போகலாம் சென்னை 2ஆவது விமான நிலையம் அமையும்.. பரந்தூர் வரை வருகிறது மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஏர்போர்ட் போகலாம்

அமைச்சர் அன்பரசன் பேச்சு

இந்த கருத்தரங்கில் அமைச்சர் அன்பரசன் பேசுகையில், ஒரு நகரம், மாநகரம் ஆகும் போதும், மாநகரம் பெருநகரமாக மாறும் போது மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அப்படி போக்குவரத்து வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். சென்னை இனி அரக்கோணம், அச்சரப்பாக்கம், திண்டிவனம் வரை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

அமைச்சர் முத்துச்சாமி

இதனைத்தொடர்ந்து அமைச்சர் முத்துச்சாமி பேசுகையில், சென்னை பெருநகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையை சிந்தித்து திட்டமிடப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு கூட எதிர்காலத்தை பற்றி திட்டமிடல் இல்லாததே காரணம். இந்தப் பணிகளை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விரைவில் கணக்கீடு பணிகள்

2026க்கு பின் சென்னை நகரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கணக்கில் எடுக்கப்பட்டு பெருநகர விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மக்கள் தொகை அதிகரிப்பு, பொருளாதார மேம்பாடு , போக்குவரத்து அதிகரிப்பு, சாலை விரிவாக்கப் பணிகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் கணக்கீடு, புறநகரில் உள்ள ஏரிகள், குளங்கள் கணக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை பெருநகரத்தின் எல்லை மேலும் விரிவடைவதற்கான முயற்சிகள் மற்றும் திட்டங்கள் வேகமாக தயாரிக்கப்பட உள்ளன.

3 மடங்கு பெரிதாகும் சென்னை

இதன் மூலம் சென்னை பெருநகரத்தின் எல்லை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை நகரத்தின் பரப்பு மேலும் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் மட்டும் 55 லட்சம் பேரும், புறநகரோடு சேர்த்து 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்தத் திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
On behalf of Chennai Metropolitan Development Group, a seminar was held on the preparation of the 3rd Comprehensive Plan Vision. It has been decided to expand the Chennai metropolitan area up to Acharappakkam and Arakkonam.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-metropolitan-area-is-going-to-expand-up-to-arakkonam-476494.html