சென்னை ஒபன் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய மு.க. ஸ்டாலின் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதி போட்டியில் பார்வையாளராக பங்கேற்றார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் ஒபன் டென்னிஸ் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

இதில் பார்வையாளராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருடன் திமுக மூத்தத் தலைவரும், அமைச்சருமான கே.என். நேருவும் உடனிருந்தார்.

சென்னை ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃபருஹ்விர்டோவா, போலந்து வீராங்கனை மேக்னா லினெட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

ஒற்றையர் பிரிவு ஆட்டம்

இரட்டையர் பிரிவில் கனடா மற்றும் பிரேசிலினின் கேப்ரியல்லா டாப், லுசா ஸ்டெபானி, ரஷ்யாவின் ஆனா லின்கோவா, ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் ஜோடிகள் மோதின.

இந்த நிலையில், சென்னை ஓபன் மகளிர் தொடரின் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை மக்தா லினெட்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, செக் குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

லிண்டா வெற்றி

முதல் செட்டை மக்தா லினெட் 6-4 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் லிண்டா கைப்பற்றினார்.
இதனால், போட்டி மூன்றாவது செட்டை நோக்கி நகர்ந்தது. மூன்றாவது செட்டின் தொடக்கத்தில் லினெட் ஆதிக்கம் செலுத்தினாலும், லிண்டா, ஒரே மூச்சில் 6-4 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை வென்றார்.

முதல் பரிசு வழங்கிய மு.க. ஸ்டாலின்

இதையடுத்து முதல் பரிசுக்கான கோப்பையை லிண்டாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இரண்டாம் இடம் பெற்றவரின் கோப்பையையும் மு.க. ஸ்டாலினே வழங்கினார்.

இருவருக்கான பரிசு தொகையை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
அப்போது எம்.பி., கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன், அமைச்சர் மெய்ய நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/czech-teen-linda-fruhvirtova-claims-first-wta-title-in-chennai-512301/