“அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை கடலில் மூழ்கும்.. வெளியான பகீர் தகவல்” – சென்னைவாசிகள் அதிர்ச்சி! – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

First Published Sep 20, 2022, 2:44 PM IST

உலக நாடுகள் மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைத்து பெரு நகரங்களும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னைக்கான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த அறிக்கையின்படி கடல் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செ.மீ உயரும். இதனால் சென்னையில் 300 அடி கடற்கரை பகுதிகள் நீருக்குள் மூழ்கிவிடும். அடுத்த 100 ஆண்டுகளில் பேருந்து நிறுத்தங்கள், புதிதாக அமைக்கப்படும் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் மின்சார ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

Sea level rise threatens to submerge coastal areas of Chennai within the next 5 years

மேலும் செய்திகளுக்கு..ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

உலக அளவில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 3.7 மி.மீ அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் கடல் நீர்மட்டம் உயருவது ஆசியாவில் மிக வேகமாக உள்ளது. இதுவரை கடந்த 100 ஆண்டுகளில் ஏற்படும் கடல் மட்டம் உயர்வு, வரும் 2050க்குள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், இந்த நுாற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் உருகுவது மிகவும் வேகமாக உள்ளது. இதனால், அதன் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது. இது கடல் நீர்மட்டம் உயர்வதற்கு காரணாக அமைந்து விடுகிறது. குறிப்பிட்ட 12 இந்திய நகரங்கள் கடல் மட்டத்தைவிட 3 அடி வரை ஆழத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி, பருவநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கடல் மட்ட உயர்வால் சென்னையில் ஒரு பகுதி மூழ்கும் என்றும், குடிசைப்பகுதிகள் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் – வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

Sea level rise threatens to submerge coastal areas of Chennai within the next 5 years

இந்தப் பாதிப்புகளைக் கையாள்வதற்காக சி40 கூட்டமைப்பு, நகர்ப்புற மேலாண்மை மையம் (Urban Management Centre) ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் செயல்திட்ட அறிக்கையை உருவாக்கியுள்ளன. அந்த அறிக்கையில் 67 சதுர கி.மீ. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி, அதாவது 16% பகுதி, 2100ம் ஆண்டில் வெள்ளத்தில் நிரந்தரமாக மூழ்கும். 

இதனால், சென்னையில் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். 28 எம்.டி.சி பேருந்து நிலையங்கள், 4 புறநகர் ரெயில் நிலையங்கள், 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், இரண்டு அனல் மின்நிலையங்கள் ஆகிய கட்டுமானங்களும் 2100ம் ஆண்டுகளில் வெள்ளத்தில் மூழ்கும். அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரும் என்பதால், 100 மீட்டர் நீள கடற்கரை பகுதி கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு, தரவுகளின் அடைப்படையில் ஆராய்ந்து இந்த அறிவியல்பூர்வ அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 1076 கி.மீ கடற்கரையைக் கொண்டுள்ள 14 கடலோர மாவட்டங்களில் ஒரு ‘உயிரி தடுப்புச்சுவர் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” – தொடரும் மர்மங்கள்

Last Updated Sep 20, 2022, 2:44 PM IST

Source: https://tamil.asianetnews.com/tamilnadu/sea-level-rise-threatens-to-submerge-coastal-areas-of-chennai-within-the-next-5-years-rii4br