சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வரிசைகட்டும் ஸ்டாண்ட்-அப் காமெடிகள் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Tamil News:சென்னையில் இந்த வாரம் மக்களுக்காக வேடிக்கையான ஸ்டாண்ட்-அப் காமெடிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தயாராக உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25ஆம் தேதி) ஸ்டாண்ட்-அப் காமெடியன் மனோஜ் பிரபாகர் தனது ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியை ஆங்கில மொழியில்  நடத்தவிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து நடக்கவிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

‘டிரிபிள் த்ரெட்’

‘டிரிபிள் த்ரெட்’ என்ற நிகழ்ச்சியின் தலைப்பு அச்சுறுத்தும் வகையில் தென்பட்டாலும், அவை மக்களை சிரிப்புடன் வைத்திருக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர்களான மனோஜ் பிரபாகர், யோகேஷ் ஜெகநாதன் மற்றும் விவேக் முரளிதரன் ஆகியா இம்மூவரும் தி சவேராவில் உள்ள சவுத் ஆஃப் காமெடி கிளப்பில் (சோகோ) இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். செப்டம்பர் 24ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழலாம்.

‘திங்கிங் அவுட் லவுட்’

மனோஜ் பிரபாகர், ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் தனது ‘திங்கிங் அவுட் லவுட்’ நிகழ்ச்சியை ஆங்கில மொழியில் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி காமெடியனின் அனைத்து வேடிக்கையான எண்ணங்கள் மற்றும் அவதானிப்புகளின் தொகுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஊர்களுக்கு சென்று இந்நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள பிரபாகர் செப்டம்பர் 25ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள அரங்கத்தில் சென்னை மக்களுக்காக தயாராக உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/entertainment/stand-up-comedian-manoj-prabhakar-shows-coming-chennai-this-week-513429/