குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார்களை தயார் நிலையில் வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு அளித்துள்ளது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைக்க மாநகராட்சி கூறியுள்ளது. கால்வாய்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=801486