சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை! – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப் படம்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

கடந்த சில நாள்களாக சென்னையில் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

சென்னை தியாகராய நகர், மாம்பலம், பட்டினப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோன்று, சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/sep/26/rain-in-chennai-and-suburban-places-3922674.html