இலங்கையில் இருந்து 6 மீனவர்கள் சென்னை வருகை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த மாதம் இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர், வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதினார். கடந்த 12ம் தேதி விடுதலையான அவர்கள் நேற்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். தமிழகஅரசு சார்பில் வரவேற்பு அளித்து ராமேஸ்வரத்திற்கு அழைத்து சென்றனர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=802783