சென்னையில் வடிகால் பணியால் ஓர் இடத்தில் 20 நிமிடங்களில் வெளியேறிய மழைநீர் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இன்று கனமழை பெய்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகளின் பலனால் ஓர் இடத்தில் 20 நிமிடங்களில் தண்ணீர் வடிந்ததுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று பிற்பகலில் சென்னையில் கனமழை பெய்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அனைத்து பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சென்னையில் மழைநீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் முறையாக செல்கிறாதா என்பதை அனைத்து பொறியாளர்களும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வில் ஒரு சில இடங்களில் தேங்கியை மழைநீர் 20 நிமிடங்களில் வெளியேறியது தெரியவந்துள்ளது. இதன்படி எம்ஆர்சி நகரில் ஒரு மணி நேரத்தில் 42 மீ.மீ மழை பதிவாகி உள்ளது. இதில் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய மந்தவெளி தேவநாதன் சாலையில் தற்போது 20 நிமிடங்களில் தண்ணீர் வெளியேறி உள்ளது தெரியவந்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/875271-chennai-commissioner-order-to-engineers-for-heavy-rain-in-chennai.html