சென்னையில் 3500 சாலைகள் 2 வாரத்தில் சீரமைக்கப்படுகிறது – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னையில் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் மின்சார வாரியம் மூலமும் சாலைகளில் தோண்டப்படும் பணிகள் நடக்கிறது.

சென்னை மணப்பாக்கத்தில் 3500 சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் 1380 சாலைகளும், மின்சார வாரியம் மூலம் 500 சாலைகளும் தோண்டப்பட்டு சேதம் அடைந்துள்ளன.

இந்த 3500 சாலைகளும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு இன்னும் 2 வாரங்களில் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீரமைப்பு பணிகளில் 25 சதவீதம் முடிந்துள்ளன. 50 சதவீத பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. மீதமுள்ள பணிகளுக்கு டெண்டர் கோரப்பட உள்ளது.

இந்த சாலைகளை தோண்டும் போது அதை சீரமைப்பதற்கான செலவை அந்த துறை மாநகராட்சியில் செலுத்துகிறது. அந்த தொகையை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி சீரமைப்பு பணியை மேற்கொள்கிறது.

பணிகள் நடைபெறும் நேரங்களில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அவசர கால நிலையில் சாலைகளில் பள்ளங்களை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்கிறது. மேலும் வார்டுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கும் நிதி வழங்கப்பட்டு சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-corporation-take-action-3500-roads-repaired-in-2-weeks-are-in-chennai-519502