சென்னை: ரீல்ஸ் மோகத்தால் காணாமல் போன சிறுமி.! இன்ஸ்டா பக்கத்தை வைத்து போலீஸ் மீட்பு.! – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மூலம் பிரபலமான, காணாமல் போன சிறுமியை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து போலீசார் மீட்டு உள்ளனர்.

சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த சிறுமி உடல் நல குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். இது குறித்து விடுதியினுடைய அலுவலர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமியினுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து, சிறுமி ஏற்கனவே ரீல் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பிரபலம் அடைந்த மற்றொரு பெண்ணுடன் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் சிறுமியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கூட்டி வந்தனர்.

image

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிக்கு, ரீல்ஸ் வீடியோக்கள், மற்றும் சமூக வலைதள வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ போடுதல் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக நிறைய நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ செய்வதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அவர் சென்றது தெரியவந்தது.

மேலும் பெண்கள் காப்பகத்தில் இருப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுமியினுடைய தந்தையிடம் சிறுமியிடம் அறிவுரை கூறி போலீசார் பாதுகாப்பாக பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/148401/Chennai–The-girl-who-went-missing-because-of-her-passion-for-reels—Police-rescue-with-Instagram-page–