சென்னை டூ நெல்லை ஒரு டிக்கெட் விலை ரூ. 3,400 – உச்சத்தில் ஆம்னி பஸ் கட்டணம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தசரா பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.

இதனால், பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, தனியார் சொகுசு பஸ்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்களின் கட்டணம் உச்சமடைந்துள்ளது.

தசரா பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களுக்கு செல்லும் சொகுசு பஸ்களின் கட்டணம் விண்ணை தொட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசை, திசையன்விளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்களின் கட்டணம் பல மடங்காக உள்ளது.

சென்னையில் இருந்து இன்று நெல்லை செல்லும் தனியார் பஸ்களில் அதிகபட்ச கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் தனியார் ஆம்னி பஸ்களின் அதிகபட்ச கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் சொகுசு பஸ்கள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதால் தசரா பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/omni-bus-ticket-price-at-rocket-high-in-southern-district-travel-805313