சென்னை மாநகராட்சியில் வரி வசூல் உயர்வு..சென்னை மாநகராட்சி தகவல் – தந்தி டிவி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதலாக வரி வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு உட்பட்டு 200 வார்டுகள் உள்ளன.

இங்கு உள்ள கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும், வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2022-23 ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 2021-2022 நிதியாண்டில் மொத்தமே 1240 கோடி வரி வசூலாகியிருந்தது என்றும்,

ஆனால் தற்போது முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வசூலாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

2022-23ம் நிதியாண்டில் மொத்தம் 1700கோடி வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://www.thanthitv.com/latest-news/tax-chennai-corporation-140299