சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்: சென்னை போலீஸ் அறிவிப்பு – வெப்துனியா

சென்னைச் செய்திகள்

சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

 

ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடப்பதால் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

 

அதன்படி ஈகா சந்திப்பில் இருந்து சென்டிரல் நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் பர்னபி சாலை சந்திப்பில் இருந்து, இடதுபுறம் திரும்பி பிளவர்ஸ் சாலை வழியாக போக வேண்டும். 

ஆனால் அதே நேரத்தில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக தடை இல்லை. 

 

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edited by Siva

Source: https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-traffic-changed-from-today-122100300064_1.html