சென்னை முழுவதும் சோதனை; 400 குற்றவாளிகள் கைது – Tamil Murasu

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யில் ஒரே நாளில் 403 குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சென்­னை­யில் செயின் பறிப்பு, வழிப்­பறி, திருட்டு போன்ற வழக்கு களில் தொடர்­பு­டைய குற்­ற­வாளி களை பிடிக்க காவல்­துறை அதி­ரடி வேட்­டையை தொடங்­கி­னார்.

சென்­னை­யில் 4 மண்­ட­லங்­க­ளி­லும் 2500க்கும் மேற்­பட்ட வழக்­கு­கள் பதி­வா­னதை தொடர்ந்து அதி­ரடி வேட்­டையை காவல்­துறை நடத்தினார்­கள்.

அதே போல் கஞ்சா, குட்கா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்­க­ளுக்கு எதி­ரா­க­ காவல்­துறை தீவி­ரப் படுத்தியுள்­ளது.

இந்த நிலை­யில் சென்­னை­யில் குற்­றச்­செ­யல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்கு மாறு காவல்­துறை ஆணை­யர் சங்­கர் ஜிவால் உத்­த­ர­விட்­டார்

சோத­னை­யில் வீடு புகுந்து திரு­டு­தல், செல்­போன், செயின் பறிப்­பு­களில் ஈடு­பட்ட 563 குற்றவாளி­களை காவல்­துறை அடை­யா­ளம் கண்­டது.

சென்­னை­யில் கிழக்கு மண்­ட­லத்­தில் 167 குற்­ற­வா­ளி­களும், வடக்கு மண்­ட­லத்­தில் 148 குற்­ற­வா­ளி­களும், தெற்கு மண்­ட­லத்­தில் 141 குற்றவாளி­களும், மேற்கு மண்­ட­லத்­தில் 107 குற்­ற­வா­ளி­களும் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர்.

இது தொடர்­பாக காவல்­துறை குற்­ற­வா­ளி­க­ளின் பட்­டி­யலை சேக­ரித்­த­னர்.

இதன் அடிப்­ப­டை­யில் காவல்துறை 403 குற்­ற­வா­ளி­களை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்­த­னர்.

இவர்­கள் வீடு­களில் பூட்டை உடைத்து திரு­டு­தல் மற்­றும் வழிப்­பறி கொள்ளை சம்­ப­வங்­களில் ஈடு­படும் குற்­ற­வா­ளி­கள் ஆவர். இவர்­களில் 10 பேர் காவல்­துறை காவ­லில் இருந்து தப்பி ஓடி தலை­மறை­வாக இருந்­த­னர்.

அவர்­களும் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர்.

இந்த நிலை­யில் குற்­ற­வா­ளி­கள் 29 பேர் திருந்தி புதிய வாழ்க்­கையை தொடங்­கும் வகை­யில் அவர்­க­ளி­டம் பாது­காப்புப் பத்­தி­ரம் பெற்று பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மீத­முள்ள 160 குற்­ற­வா­ளி­களை பிடிக்க காவல்­துறை அதி­ரடி நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20221007-97517.html