சென்னை: லிஃப்டில் சிக்கித் தவித்த 7 பேர் – கதவை உடைத்து மீட்ட போலீசார் – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னையில் உணவகம் ஒன்றில் லிஃப்டில் மாட்டிக்கொண்ட 7 பேரை போலீசார் போராடி மீட்டனர்.

சென்னை பாண்டி பஜார் ஜி.என். சாலையில் அமைந்துள்ள மல்லு ஜாயிண்ட் என்ற உணவகத்திற்கு சாப்பிட வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் அங்கிருந்த லிஃப்ட்டை பயன்படுத்தியுள்ளனர். அப்போது லிஃப்டின் கதவு திடீரென திறக்க முடியாமல் நின்றது. நீண்ட நேரமாகியும் திறக்காததால் பதட்டம் அடைந்த அவர்கள் உதவி கோரி சத்தம் எழுப்பியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த  உணவக ஊழியர்கள்  லிஃப்டின் கதவை எவ்வளவோ திறக்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு லிஃப்டின் கதவுகளை இரண்டு ராடுகளால் உடைத்து கதவை திறந்தனர். உள்ளே சிக்கித் தவித்த மூன்று பெண்கள், மூன்று ஆண்கள், ஒரு குழந்தை என அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதையும் படிக்க: சென்னை: அதிவேகமாக வந்த பைக் மோதிய விபத்து – கைக் குழந்தையுடன் பெண் உயிரிழப்பு

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/148821/Police-rescued-7-people-stuck-in-a-lift-in-a-restaurant-in-Chennai