சென்னை: கள்ளச்சந்தையில் மது விற்பனை; கொலைசெய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்! – என்ன நடந்தது? – Vikatan

சென்னைச் செய்திகள்

இது குறித்துப் பேசும் கண்ணகி நகர்ப் பகுதி மக்கள், “இந்தப் பகுதியில் காவல்துறையினரின் துணையோடு கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடந்துவருகிறது. அதில் குறிப்பாக இரண்டு தரப்பினர் போட்டிப் போட்டு 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையிலிருந்து மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதில் இரண்டு டீம்களுக்கிடையே நடந்த போட்டியால்தான் மணிகண்டன் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். எந்நேரமும் மதுபானம் கிடைப்பதால் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் போதையில் வேலைக்குக்கூட செல்வதில்லை. எனவே காவல்துறையினர், கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.

கொலை வழக்கில் கைதான காந்தி

இது குறித்து கண்ணகி நகர் போலீஸாரிடம் கேட்டபோது, “போதையில் நடந்த தகராறு காரணமாக மணிகண்டன் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலை வழக்கில் கண்ணகி நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகவேல் (40), ராம்குமார்(எ) குட்டியப்பா (38), காந்தி (எ) குணசேகரன் (23), அந்தோனிராஜ் (34) ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகிறோம். கள்ளச்சந்தையில் மது விற்பனையில் இந்தக் கொலை நடந்தது என்று கூறுவது தவறு” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/chennai-police-arrested-4-in-sanitary-worker-murder-case