மழைநீர் வடிகால் பணிகள்: சென்னை தாங்குமா… தண்ணீர் தேங்குமா?! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை, ‘கத்தி’ படத்தில் காண்பிப்பதுபோல பூமிக்கு மேல் இருப்பதைக் காட்டிலும், பூமிக்கு அடியில்தான் அத்தனை விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. மின்சார இணைப்பு, டெலிபோன் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, மழைநீர் வடிகால் இணைப்பு, குடிநீர் இணைப்பு, இணையதள கேபிள்கள், மெட்ரோ ரயில் எனப் பல திட்டங்கள் பூமிக்கு அடியில்தான் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது மழைநீர் வடிகால் திட்டம். ஏனெனில், பருவமழையின்போது தினம்தோறும் கொட்டித்தீர்க்கும் மழையால், மழைநீர் சாலை, தெருக்களில் தேங்காமல் வடிகால்கள் வழியே கால்வாய்கள், ஆறுகளுக்குச் சென்று, கடலில் கலக்க வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம். அது முழுமையாக நிறைவேறியதா… வரப்போகும் பருவமழைக்கு சென்னை தாக்குப்பிடிக்குமா? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர்

முதலில் சென்னை மாநகராட்சிக்குள் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் திட்டங்கள் குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் நம்மிடம் விளக்கமாகப் பேசினார். “கொசஸ்தலையாறு வடிகால் திட்டம், கோவளம் வடிகால் திட்டம், சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் என பலவகையான திட்டங்களில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. புதிதாக வடிகால்கள் அமைப்பது மட்டுமின்றி, ஏற்கெனவே இருக்கிற வடிகால்களில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/delay-in-storm-water-drain-works-can-chennai-face-the-water-logging-issues