சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் கவனத்திற்கு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Job Fair in Chennai: சென்னை மாவட்ட நிர்வாகம், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த முடிவு செய்துள்ளது.

வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதியன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகம் நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்குகொள்ள உள்ளது. இதில் 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முகாமில் பங்குகொள்ள நினைக்கும் இளைஞர்கள், எட்டாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம்.

மேலும், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல நிறுவனங்கள் பங்குகொள்ள உள்ளனர்.

இந்த முகாமில் கலந்துகொள்ள நினைக்கும் அனைவரும் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக்குறிப்பு ஆகியவற்றுடன் வருகை தந்து, தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/education-jobs/job-fair-in-chennai-on-15th-october-524791/