சென்னை, கோவைக்கு சிறப்பு பஸ்கள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

விருதுநகர்

சிவகாசி,

தீபாவளிக்கு சிவகாசியில் இருந்து சென்னை, கோவைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு முடிந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தொழில்நகரமான சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக சிவகாசி பணிமனை மேலாளர் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தீபாவளியையொட்டி வருகிற 21,22,23 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சிவகாசிக்கு தினமும் 3 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

ஆன்லைனில் முன்பதிவு

இந்த பஸ்கள் அடுத்த நாள் இரவு சிவகாசியில் இருந்து சென்னைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோவையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்து சென்னை செல்ல வசதியாக சிவகாசியில் இருந்து 25, 26 ஆகிய தேதிகளில் தினமும் 3 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

அதேபோல் கோவைக்கும் 2 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு முடிந்து விட்டால் கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்து. சிவகாசியில் இருந்து மதுரைக்கு விடிய, விடிய பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/special-buses-to-chennai-and-coimbatore-813286