சென்னை: பால்கனியில் இருந்து கீழே விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

மதுரவாயலில் பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

சென்னை மதுரவாயல் கங்கையம்மன் நகர் 8-வது தெரு பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் – பூர்ணிமா தம்பதியரின் ஒரே மகள் தியா (2). இவர்கள் வீட்டின் அருகேயே அத்தை மகேஸ்வரி வீடூ உள்ளது அங்கு நேற்று முன்தினம் இரவு சென்ற குழந்தை, வீட்டின் முதல் மாடி பால்கனியில் விளையாடி கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாரதவிதமாக தீடீரென தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுயநினைவை இழந்த குழந்தையை மீட்டு பெற்றோர் உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

image

இந்நிலையில் இன்று காலை குழந்தை தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/149073/Chennai-A-child-who-fell-from-a-balcony-died-without-treatment