IIT Madras: பொதுமக்களுக்கான மூன்று நாள் கருத்தரங்கு, நோபல் பரிசு வெற்றியாளர் பங்கேற்பு! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதன் முதல் நிகழ்வாக 2019-ம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் டிடியர் கொலோஸ் நிகழ்ச்சியை துவங்கி வைத்து, “ புற்கோள்களும், பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும்” என்ற தலைப்பில் அறிவியல் சொற்பொழிவாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் https://iitm.zohobackstage.in/SubraSureshDistinguishedLectureSeries என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்.

முதல் நாளன்று தொழில்நுட்பம் சார்ந்த உரைகளும், இரண்டாம் நாளில் பொதுநிகழ்வுகள் குறித்த உரையாடலும், மூன்றாவது நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல் நடைபெறும் எனத் தெரிகிறது. இது குறித்து ஐ.ஐ.டி மெட்ராஸின் கார்ப்பரேட் ரிலேஷன் துறை தலைவர் மகேஷ் பஞ்சகுலா பேசுகையில் “எங்களை பொறுத்தவரையில் இந்நிகழச்சி நடைபெறுவது ஓர் மகிழ்ச்சிகரமான விஷயம். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் உரைகள் நம் மாணவர்களுக்கு ஒரு உலகளாவிய பார்வை கொடுக்கும். ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் யோசிக்க இது நிச்சயம் உதவிடும் ” என்று தெரிவித்தார்.

Source: https://www.vikatan.com/oddities/education/iit-madras-to-organize-a-three-day-research-conference-nobel-laureate-to-attend-this-open-for-public-event