IIT Madras: வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்காக ஐ.ஐ.டி மெட்ராஸின் புதிய முன்னெடுப்பு; லிங்க் இதோ! – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்த கோர்ஸ்களில் சேர விரும்பும் மாணவர்கள் https://iit.infactpro.com/ என்ற இணையத்தளத்திலும், https://skillsacademy.iitm.ac.in/ என்ற தளத்திலும் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பேசிய ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குனர் டாக்டர் காமகோட்டி “வாழ்க்கை என்பதே ஒரு பாடம் தான். அதில் நாம் தினமும் கற்றுக்கொண்டு, நம்மை செழுமைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தற்போது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற பல விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வது அவசியமாகிறது. அதற்கு இப்பாடத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இந்தப் பாடங்களை ஆன்லைனில் கற்பிப்பதன் மூலம் தொலைதூரத்தில் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள்கூட எளிதாக கற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

இந்தப் பாடத்திட்டத்தைக் குறித்து விளக்கிய பேராசிரியர் மங்களா சுந்தர், ” தற்போது பொருளாதாரம் தெரிந்த மாணவர்களை தான் வங்கிகள் பெரும்பாலும் எதிர்பார்க்கின்றனர். அதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் விதத்தில் இப்பாடத்திட்டத்தை அமைத்துள்ளோம். இதில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, டிஜிட்டல் பேங்கிங், வர்த்தக சந்தை, வங்கி அடிப்படைகள், ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இப்பாடங்கள் அனைத்துமே அந்தந்த துறைசார்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படும்” என்று கூறினார்.

Source: https://www.vikatan.com/oddities/education/new-initiative-of-iit-madras-for-the-students-preparing-for-banking-examinations