பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளது… சென்னை மேயர் பிரியா ராஜன் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சிங்கார சென்னை திட்டத்தில் மழை நீர் வடிகால் பணிகள் 97 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது என்றும்  இணைக்கப்படாமல் இருந்த 444 வாடிகால்களில், 247 இடங்களில் இந்த ஒருவாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வாரத்தில் மீதி பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

கொசஸ்தலை ஆறு பணிகள் முடிப்பது மிகப்பெரியது என்பதால், 2024ல் தான் முடியும் என கூறிய மேயர், சென்னை மாநகராட்சி பொறுத்த வரை 33 கால்வாய்களில் 53 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது என்றார். சுரங்க பாதைகளில் அதிக நீர் தேங்கினால் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒலி எழுப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
166 பாதுகாப்பான இடங்கள் நிவாரண மையதிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் பத்தாயிரம் பேருக்கு உணவு சமைப்பதற்கான சமையல் கூடம் தயார் செய்து வருகிறோம் என பேசிய மேயர் பிரியா ராஜன், நீரை வெளியேற்ற 124 மோட்டார்கள் பம்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான மோட்டார்கள் தவிர அவசர தேவைக்கு மோட்டார்கள் தேவைபட்டால் அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறோம் என்றார்.

எந்தெந்த இடங்களில் மரம் விழும் நிலையில் இருக்கிறதோ, அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளை மேற்கொள்ள செய்ய அறிவுறுத்தி உள்ளோம் என்றும்  இதுவரை 50 படகுகளும், 40 நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: சத்யாவை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்ய முற்பட்டேன்…’ – போலீஸில் சதீஷ் வாக்குமூலம்

தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, வானிலையை யாராலும் கணிக்க முடியாது என்றும்  இதற்கு முன்பு 10 நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் எனில், இந்த ஆண்டில் அவ்வாறு இல்லாமல், தேங்கி நிற்கும் மழை நீரை, 24 மணி நேரத்தில் வெளியேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அடையார் கூவம் பொறுத்த வரை (WRD)  கீழ் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் அறிவுறுத்தல் பேரில், போதுமான பாதுகாப்புகள் அனைத்தையும் ஒப்பந்ததாரர்களே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், மண்டல அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தகவல்களை கேட்டறிந்து, காலத்திற்கு தகுந்தாற் போல செயல்பட அறிவுறுத்தி உள்ளோம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

 

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/chennai-mayor-priya-press-meet-about-monsoon-819295.html