இசை மழையில் நனையவிருக்கும் சென்னை: இந்த வார நிகழ்ச்சிகளின் பட்டியல் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

இந்தாண்டு பண்டிகைக்கால இறுதியில் சென்னை மக்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது. அவற்றின் பட்டியல் இதோ:

ஆர்.ஆர்.சபா மற்றும் மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் முதல் டெத் மெட்டல் ஷோ வரை, சென்னைவாசிகளுக்காக இசை மழை காத்திருக்கிறது.

ருக்மணி விஜயகுமாரின் நடன நிகழ்ச்சி:

பிரபல நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ருக்மணி விஜயகுமார் அக்டோபர் 19-ஆம் தேதி ‘ஈஸ்வரா’ என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றவுள்ளார். இந்த நடனம் இந்துக் கடவுள்களான சிவன் மற்றும் பார்வதியை மையமாகக் கொண்டது என்றும், அவர்களின் வடிவங்களை தத்துவக் கண்ணோட்டத்தில் நமக்கு என்ன சொல்கிறது என்பதை நடமாக காட்சிப்படுத்தவுள்ளார்.

தி பேக்யார்டின் நேரலை:

மெட்ராஸ் காமெடி சர்க்யூட் இந்த முறை தமிழ் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியுடன் மீண்டும் களமிறங்குகிறது. நகைச்சுவை நடிகர்கள் யோகேஷ் ஜெகநாதன் மற்றும் குண கண்ணன் ஆகியோர் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியை வரும் சனிக்கிழமை அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 4 மணி முதல் அடையாறில் உள்ள தி பேக்யார்டில் நேரலையில் பார்க்கலாம்.

மெட்ராஸ் மியூசிக் அகாடமி நடத்தும் கச்சேரி:

அக்டோபர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அக்டோபர் 18 அன்று வீணா வெங்கட்ரமணியின் நிகழ்ச்சி மற்றும் குண்டுர்த்தி அரவிந்த்னின் மிருதங்க நிகழ்ச்சி; அக்டோபர் 19 ஆம் தேதி கே ஆர் ​​மனஸ்வினியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி. அக்டோபர் 20 ஆம் தேதி ராதே ஜக்கியின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளது. மூன்று கலைஞர்களும் இந்த நாட்களில் மாலை 6 மணி முதல் நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

டெத் மெட்டல் ஷோ:

ஜெர்மானிய டெத் மெட்டல் குழுவான ‘டிவைட்’ மற்றும் இந்திய டெத் மெட்டல் இசைக்குழு ‘காட்லெஸ்’ ஆகியோரைக் கொண்ட ‘ரேட்ஸ் ஆஃப் கொமோரா’ நிகழ்ச்சியை சென்னையில் நடத்தவுள்ளனர். 2019 இல் இரு இசைக்குழுக்களும் ஒன்றாக ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தன. அக்டோபர் 21 அன்று இரவு 8 மணி முதல் கியர்ஸ் மற்றும் கேரேஜ் ரெஸ்டோபாரில் அவர்களின் நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/entertainment/chennai-this-week-filled-with-music-concerts-and-standup-shows-527546/