சென்னை : பிரபல நடிகை வீட்டில் கொள்ளை…! பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் மாயம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்து வந்த நபர் அதிக விலை மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருள்களை திருடி சென்றுள்ளதாக நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்படி, ரூ.6 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், 50 ஆயிரம் மதிப்புடைய லேப்டாப். செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று உள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

“நடனம் ஆடும் போது அதிக உத்வேகம்” – ‘வாரிசு’ ஷூட்டிங்கில் விஜய்யை சந்தித்து பேசிய மனோபாலா டூவீட்


Related Tags :

Source: https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/chennai-robbery-at-the-house-of-a-famous-actress-818781